போக்குவரத்து தொழிலாலர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத வக்கற்ற ஆட்சி - நாராயணன் திருப்பதி காட்டம்

 
narayanan thirupathi narayanan thirupathi

உடனடியாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை காண வேண்டும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கும் வக்கற்ற நிலையில் இந்த ஆட்சி இருக்கிறது. உடனடியாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சுமூகமான தீர்வை காண வேண்டும்.

narayanan thirupathy

அதை விடுத்து, ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகளை எடுப்பது, ஆளும் கட்சியின்  வீண் ஜம்பத்தையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்குள்ளே விரலைவிட்ட குழந்தையின் கதைபோல ஆகிவிடும், என எச்சரித்திடவும் விரும்புகிறேன். இப்படி சொன்னது 2018ம் ஆண்டு நம்முடைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது. சொன்னது நீ தானா? சொல்! சொல்!! சொல்!!! என குறிப்பிட்டுள்ளார்.