வாயு கசிவுக்கு விக்டரி பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்- நாராயணன் திருப்பதி
வாயு கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியின் அலட்சியமே காரணம் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள விக்டரி மேல் நிலைப்பள்ளியில் வாயு கசிவு விவகாரத்தில் மாணவர்களே இது போன்ற சம்பவத்தை அரங்கேற்றி நாடகமாடியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்ற ஒரு செய்தியை பார்க்க நேர்ந்தது. விடுமுறைக்காக, மயக்கம் தரும் ஏதோ ஒரு மர்ம பொருளை கசிய விட்டார்கள் என்று சொல்லப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
அப்படியே இருதாலும் மாணவர்களை தாண்டி, அந்த பள்ளியின் நிர்வாகமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களுடைய படிப்பு மட்டுமல்ல, ஒழுக்கம், நடத்தை, பண்பாடு, அணுகுமுறை ஆகிய அனைத்திற்கும் பள்ளி நிர்வாகமே பொறுப்பு. இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது என்பதால் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.


