செந்தில் பாலாஜி இன்னும் எத்தனை நாட்கள் அமைச்சராக தொடர்வார்? - நாராயணன் திருபதி கேள்வி

 
narayanan thirupathi

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இலாகா இல்லா அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாதாரண ஜாமீன் மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தி, வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ ஜாமின் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில், இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்டிருந்த அமைச்சர்  செந்தில்பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்ச நீதி மன்றம். பிணை கொடுக்கும் அளவிற்கு உடல்நிலை அப்படி ஒன்றும் மோசமில்லை என்றும் தேவையெனில் வழக்கமான பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தல். மீண்டும் புழல் சிறைக்கு செல்வாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் தமிழக அமைச்சர்? இது தான் திராவிட மாடலா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.