நரேந்திர மோடி பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது!
குறிப்பாக :
1. 06/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பேசினார்.
2. 08/04/2024 அன்று, பீகாரில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ராமரை இழிவுபடுத்தியதாகக் கூறினார்.
3. 09/04/2024 அன்று, உத்திரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை பாவபூமி என்றும், தமிழகத்தை தேச விரோதிகளின் பூமி என்றும் கூறி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்தியுள்ளார்.
4. தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், நல்ல சாதியை சார்ந்த ஒருவர் தங்கள் கட்சி தலைவராக இருப்பதாகக் கூறி, பிற சமூக மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தினார்.
தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது!
— Mano Thangaraj (@Manothangaraj) April 11, 2024
குறிப்பாக :
1. 06/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்… pic.twitter.com/Mzgci8CVdq
இவை அனைத்தும் வன்மையான கண்டனத்திற்குரிய பேச்சு. இப்பேர்பட்ட ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் என்று சொல்வது இந்தியாவிற்கே தலைகுனிவு.
#ViolationOfSection125
THE REPRESENTATION OF THE PEOPLE ACT, 1951
Section 125: Promoting enmity between classes in connection with election.—Any person who in connection with an election under this Act promotes or attempts to promote on grounds of religion, race, caste, community or language, feelings of enmity or hatred, between different classes of the citizens of India shall he punishable, with imprisonment for a term which may extend to three years, or with fine, or with both.
இவரது பேச்சுக்கள் யாவும், இச்சட்டப்பிரிவிற்கு எதிரானது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கூட்டணி கட்சியாக செயல்படாமல் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். நரேந்திர மோதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், இந்தியாவில் 2024 தேர்தல்கள் முடிவடையும் வரை அவரது பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார.


