வீட்டு வாசலில் அமர்ந்ததற்காக நரிக்குறவ பெண் மீது கொலைவெறி தாக்குதல்
போரூர் அருகே நரிக்குறவர் இன பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை அருகே போரூர் அடுத்த மதனந்தபுரம் மெயின் ரோட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஊசி பாசி விற்கும் பெண்கள் பாணி பூரி கடையில் பானி பூரி வாங்கி அங்கு இருந்த ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தா கூறப்படுகின்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அந்த பெண்களை தகாத வார்த்தையில் திட்டியதோடு ராதா என்ற நரிக்குறவ பெண்ணின் மீது தான் எடுத்து வந்த அரிசி மூட்டையை மேலே போட்டுள்ளார். பின்னர் விட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து சாரா மாறியாக பெண்ணின் தலையில் தாக்குகிறார் அதில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
#JUSTIN போரூர் அருகே நரிக்குறவர் சமூக பெண் மீது தாக்குதல்
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 3, 2024
வீட்டு வாசலில் அமர்ந்து பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் கட்டையால் தாக்கிய வீட்டு உரிமையாளர்#Porur #Chennai #Panipuri #Attack #news18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/5szdIZpO4u
இதனையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது, அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் செல்லாத நிலையில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமிரா பதிவை வைத்து விசாரித்து வருகின்றனர்.