சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - ஆளுநரின் பரபரப்பு குற்றச்சாட்டு; தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்!!

 
tn

தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ravi

சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக புகார் சொல்லப்பட்டது.  ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை.  6,7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் , இது தொடர்பாக தான் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறி பரப்பரப்பை கிளப்பியுள்ளார். 

iraianbu

இந்நிலையில் சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளுக்கு துன்புறுத்தல் என ஆளுநர் ரவி பேட்டியளித்துள்ள நிலையில் இதுக்குறித்து  விளக்கம் கேட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அத்துடன் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 7 நாட்களுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.