#Breaking தேசிய ஜனநாயக கூட்டணி - அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு அழைப்பு

 
tn

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்க பாமக மற்றும் தமாகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

modi

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கேற்று மக்களவை பொதுத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

anbumani
இந்நிலையில் டெல்லியில் வரும் 18ஆம் தேதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

gk vasan

ஏற்கனவே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.