அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - தினகரன் வலியுறுத்தல்!!

 
ttv

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி டிடிவி  தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

doctors

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில், "ஆரோக்கியமான சமூகத்தை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தொற்றுநோய், தொற்றா வாழ்வியல் நோய், விபத்துகள் என மக்கள் சந்திக்கும் துன்பங்களில் இருந்து புத்துயிருடன் மீட்கும் மருத்துவர்களை மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு இணையாக கருதுகின்றனர்.


அத்தியாவசிய சேவையின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை இந்த மருத்துவர் தினத்தில் தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.