தலைமைச் செயலகத்தில் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி!

 
tn

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அரை கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.  கடந்த 2006ம் ஆண்டு முதல் 2007 வரையும்,  2012 முதல் 2020 வரையும் ஜப்பானின் பிரதமராக இவர் பதவி வகித்துள்ளார்.  நீண்ட கால பிரதமராக இருந்த இவர் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

tn
உடல் நல குறைவால் கடந்த 2020 ஆம் ஆண்டு பதவி விலகிய இவர் கட்சி செயல்பாடுகளில்  மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நாளை நாடாளுமன்ற மேல் சபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாரா நகர ரயில் நிலையம் முன்பு நடந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில்  கழுத்தில் குண்டு பாய்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நேற்று மாலை 5 மணி அளவில் உயிரிழந்தார்.  ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி , இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்,  அதிபர் புதின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் இந்தியாவில் இன்று ஒரு நாள் தூக்கம் கடைபிடிக்கப்படுகிறது.  இதன் காரணமாக நாடாளுமன்றம் ,செங்கோட்டை ,குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

rn

இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அரை கம்பத்தில் தேசியக் கொடி  பறக்கவிடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு அலுவலகங்களில் பறக்கும் தேசியக்கொடியும் அரை கம்பத்தில்  பறக்கவிடப்பட்டுள்ளது.