தேசிய மக்களவை வாக்குப்பதிவு - 5 மணி நிலவரம் இதோ!!

 
election commision

மக்களவைத் தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.  

voting

விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள்,  திரை பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  இந்த சூழலில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

tn

அதன்படி அந்தமான் நிக்கோபரில் 56.87 சதவீதம் , அருணாச்சல் பிரதேசத்தில் 63.27% , அசாமில் 70.77 சதவீதம் , பிகாரில் 46.32% , சத்தீஸ்கரில் 63.41 சதவீதம்,  ஜம்மு காஷ்மீரில் 65.08% , லட்சத்தீவில் 59.02 சதவீதம்,  மத்திய பிரதேசத்தில் 63.25 சதவீதம்,  மகாராஷ்டிராவில் 54.85 சதவீதம் , மணிப்பூரில் 67.66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  அதேபோல் மேகலயாவில் 69.91 சதவீதம், மிசோரமில் 52.73 சதவீதம்,  நாகாலாந்தில் 55.79 சதவீதம்,  புதுச்சேரியில் 72.84 சதவீதம் , ராஜஸ்தானில் 50.27 சதவீதம்,  சிக்கிமில் 68.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  அதேபோல் தமிழ்நாட்டில் நடைபெற்ற 39 தொகுதிகளை பொறுத்தவரை 62.02 சதவீதமும் , திரிபுராவில் 76.10 சதவீதமும் , உத்தரகாண்டில் 57.54 சதவீதமும் , உத்தரப்பிரதேசத்தில் 53.56 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளது.