"ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்" - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

இந்திய நாட்டின் நான்காவது தூண் என்று புகழப்படுபவை  ஊடகங்கள். அந்த வகையில் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16ஆம் தேதி  தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ttn

இந்த நாளானது இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பானதாக பத்திரிக்கைத்துறை இருப்பதை குறிப்பதுடன்,  தொடர்ந்து அறம் தவறாது  தங்கள் பணிகளை திறம்பட செய்ய வழிவகுக்கும் வகையில் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியினையும், சேவையையும் பாராட்டும் வகையிலேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.