திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி

 
tn

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. திமுகவில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே திமுக, தனது கூட்டணி கட்சிகளியே தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

tn

அந்த வகையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியம் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு. கழகமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

tn

இந்நிலையில் திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ. கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.