நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல்: 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் சிறப்புப் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தில் அம்மனாக நடித்து வருகிறார் நயன்தாரா. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் தற்போது படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த போஸ்டரானது நேற்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
The goddess who won our hearts #Nayanthara❤️🔥
— Vels Film International (@VelsFilmIntl) November 18, 2025
Happy Birthday to the divine light of #MookuthiAmman2 ✨#HappyBirthdayNayanthara #VelsFilmInternational pic.twitter.com/dEXNIKiO7E


