ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’!

நயன்தாரா நடித்து நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாத படமொன்றும் இருக்கிறது. அது தான் டெஸ்ட். இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். தயாரிப்பாளரான சசிகாந்த் தனுஷின் ஜகமே தந்திரம் உள்பட பல படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் அவர் இயக்கி முதல் படம் இந்த டெஸ்ட்.
டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இதில் நடிகை நயன்தாரா, குமுதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
டெஸ்ட் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 4ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டெஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல வருட காத்திருப்புக்கு பின்னர் டெஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.