தமிழ்நாடு அரசின் நீட் பயிற்சி வகுப்புகள் இந்தாண்டும் தாமதமாகும் என தகவல்!!

 
neet

தமிழ்நாடு அரசின்  நீட் பயிற்சி வகுப்புகள் இந்தாண்டும் தாமதமாகும் என  தகவல் வெளியாகியுள்ளது.

neet

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுது.2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு உதவும் வகையில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

neet

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப் படவில்லை ஜூலை மாதம் தொடங்கப்பட வேண்டிய பயிற்சி வகுப்புகள் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அரசின் நீட் பயிற்சி மையத்தில் சேர விருப்பமுள்ளவர்களின் பட்டியல் கூட இதுவரை பெறப்படவில்லை; கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம்தான் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கின.