நீட் நுழைவுத்தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடக்கம்

 
ச் ச்

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.


2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவ இளநிலை படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2025-2026 ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 552 நகரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 31 நகரங்களில் 271 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் நுழைவுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்ற சரியான அடையாள ஆவணம் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், எலக்ட்ரானிக் சாதனங்கள், கால்குலேட்டர், பேனா, உணவுப் பொருட்கள் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்லீவ் லெஸ் உடைகள், பெரிய பொத்தான்கள், காலணிகள், நகைகள் போன்றவை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதச்சார்பான உடைகள் அணிவோர், தேர்வு மையத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.