நீட் வினாத்தாள் ரூ.70,000க்கு விற்பனை! டெலிகிராமில் அதிர்ச்சி
நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக கூறி டெலிகிராமில் தகவல் பரவிவருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கான முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதன் வினாத்தாள் இணையத்தில் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ரூ.70,000 வரை இந்த வினாத்தாள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. டெலிகிராம், வாட்ஸ் அப் சேனல் குரூப்களில் நடைபெற்ற chat-களின் ஸ்கீரின்ஷாட்களை Neet pg leaked materials என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்துள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் நடைபெற இருந்த நீட் பிஜி தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


