நீட் தேர்வில் குளறுபடி : மராட்டிய மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்..!
வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே மாதம் 3-ந் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, நாளை (ஜூன் 21- தேதி) மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. மறுதேர்வில் எந்தவித குளறுபடிகளும் ஏற்பட்டு விடாமல் இருக்க கல்வித்துறை தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. வினாத்தாள்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடியால் மாணவர் மற்றும் அவரது பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.
இதுகுறித்து புகாரளிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு விரைவில் புதிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Nagpur, Mahrashtra: Family of a NEET aspirant, Abdullah Mohammad Talib, claims that he was allocated a school in Abu Dhabi as his exam center for NEET-UG re-exam scheduled to be held on 21st June.
— ANI (@ANI) June 20, 2026
His father, Mohammad Talib, says, "...After the admit card was downloaded… pic.twitter.com/EmFqhIFVRK

