நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

 
suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் பயிற்சி பெற்றுவந்த மாணவி பைரவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சின்னசேலம் அடுத்த இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. விவசாயியான இவரது மகள் பைரவி (18). அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த பைரவி, மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக தொடர்ந்து நீட் தேர்வை எழுதிவருகிறார்.  ஆனால் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் பைரவியை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைய பைரவி, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். 

நேற்று முன்தினம் விஷம் அருந்திய நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பைரவி இன்று உயிரிழந்தார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பைரவி நீட் தேர்வுக்காக பயிற்சி மையம் ஒன்றி பயிற்சி பெற்றுவந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.