நெல்லை இருட்டுக்கடை உரிமை யாருக்கு? மீண்டும் எழுந்த பிரச்சனை!

 
nellai nellai

நெல்லை இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்ற விவகாரத்தில் மீண்டும் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. 

நெல்லை இருட்டுக்கடையின் முன்னாள் உரிமையாளர் பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர நயன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் இருட்டு கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என பொதுஅறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

உயிலில் குறிப்பிட்டபடி ஜெயராம் சிங் மகன் நயன் சிங்க்கு மட்டும் இருட்டுக்கடை ஸ்தாபனம் பாத்தியபட்டது. இருட்டுக்கடை விவகாரம் தொடர்பாக 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் நயன்சிங் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.