மீண்டும் விஸ்வரூபம் எடுத்த இருட்டுக்கடை உரிமை சர்ச்சை! உயிலில் இருக்கும் அதிரவைக்கும் தகவல்

 
s s

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் வீட்டில் மற்றொரு பிரச்சனை வெடித்துள்ளது. உரிமையாளர் கவிதாவின் சகோதரர் நயன் சிங், தனக்குதான் அல்வாக்கடை சொந்தம் என புது பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயன் சிங், “இருட்டுகடை கிருஷ்ண சிங் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கிருஷ்ணசிங் பிறகு பீஜிலி சிங் கடையை நடத்தி வந்தார். என்னை சிறு வயது முதல் பிஜிலிசின் தான் வளர்த்து வந்தார். நான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைக் கூட அவர் எனக்கு வாங்கிக் கொடுத்தது தான். அவர் ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் பாசமாக வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில் அவர் இறக்கும் முன் கடை, சொத்துக்களுக்கு என்னை வாரிசாக நியமித்து உயில் எழுதி வைத்திருந்தார். அவரது மனைவி என்னுடைய அத்தை காலத்திற்கு பிறகு அனைத்தும் என்னை வந்து சேர்ந்துள்ளது. அந்த உயில் 1999இல் எழுதப்பட்டது. 


நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறேன். இந்த சொத்துக்களை மாமாவும் அத்தையும் நானும் சேர்ந்து நிர்வகித்து வந்தோம். தற்பொழுது அதை அபகரிக்கும் நோக்கில் சம்பந்தி என கூறப்படும் கோவையை சேர்ந்த யுவராஜ் செயல்படுகிறார். ரெண்டு மூன்று ஆண்டுகளாக என்னுடைய அத்தையை நேரில் சந்திக்கவே முடியாத ஒரு நிலை இருந்தது. அவர்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கும் எதிர் நடவடிக்கைகளுக்கு நான் தடையாக இருப்பேன் என கருதி முன்பிருந்தே என்னை குடும்பத்தோடு சேராமல் தடுத்து  விட்டனர். இதனால் தற்பொழுது நடைபெற்ற அவர்களது திருமண நிகழ்ச்சியில் கூட நான் பங்கேற்கவில்லை. உயிலைப் பொறுத்தவரை மாமா காலத்திற்கு பிறகு அத்தை, அதற்கு பிறகு நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். தவறான வழிக்கு செல்லக்கூடாது என்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறேன்,

கனிஷ்காவின் மாமனார் அவரது பெண் குறித்து பேசி உள்ள கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது. என் கண்முன் வளர்ந்த பிள்ளை அவள். தவறான வழிக்கு செல்ல மாட்டாள். இருதரப்பு பிரச்சனைக்கு பெண்ணை பலியாக்கி விட்டார்கள். எங்கள் குடும்பம் பாரம்பரியமான குடும்பம். பல தலைமுறையாக இதுதான் எங்கள் தொழில். இருட்டுக்கடை நிறுவனமும், கடையும், சொத்தும் எனக்கு பாத்தியப்பட்டது என பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளேன். யுவராஜ் சிங்கை எனக்கு யார் என்று கூட தெரியாது. மகளை திருமணம் செய்து கொடுத்ததால் எல்லாம் அவருக்கு சென்று விடுமா? உயிலில் எனது மாமா என் காலத்திற்குப் பிறகு என் மனைவியின் காலத்திற்குப் பிறகு நிறுவனத்தை நன்றாக முறையில் நடத்த வேண்டும் என்ற முறையில் உயிலை எனது பெயரில் எழுதிக் கொடுத்தார். வீட்டுக்கடை நிறுவனம் சொத்துக்கள் உயில்படி எனக்கு வர வேண்டியது. என் மீதும் என் அம்மா மீதும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. பாகப்பிரிவினையில் கொடுக்க வேண்டிய சொத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இருட்டுக்கடை பாரம்பரியமான கடையை சிலர் சுயநலத்திற்காகவும், கடையின் பெயரையும் கெடுத்து சிறிய பெண்ணின் வாழ்க்கையும் வம்பாக்குவதை பிஜிலி சிங், ஹரிசிங் எங்கள் முன்னோர்களின் ஆன்மா கண்டிப்பாக மன்னிக்காது” என்றார்.