பெண் எஸ்.ஐ-க்கு கத்திக்குத்து...போனில் நலம் விசாரித்தார் முதல்வர்!!

 
tn

பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.

tn

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும்  மார்க்ரெட் கிரேசி  தெரசாவை  மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.    பெண்  உதவி ஆய்வாளரை நோக்கி வந்த ஒருவர் அவரின் கழுத்து, கன்னம், மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பெண் உதவி ஆய்வாளர் படுகாயம் அடைய, உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

tn

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில் மது அருந்திவிட்டு பைக்கில் வந்ததால் அபாரதம் விதித்த உதவி ஆய்வாளர் மீதுஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் முதல் காவலர் வரை தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். 



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று விளக்கமளித்துள்ளார்.