அதிமுக சட்ட விதிகளில் புதிய திருத்தம் : ஓபிஎஸ் -ஈபிஎஸின் அதிரடி முடிவு!

 
ops eps

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

op

அவை பின்வருமாறு

*அதிமுகவின் பொன்விழா ஆண்டை நாடு நகரமெங்கும் கொண்டாட வேண்டும்

*சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக66 இடங்களிலும்,  கூட்டணி கட்சிகள் 9 இடங்களிலும் என மொத்தம் 25 இடங்களில் வெற்றி பெற்றதற்கு பாராட்டுக்கள்.

*நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கும் திமுகவின் நேர்மையற்ற பிரச்சாரம் முறைகளுக்கு கண்டனம்.

*ஏழை எளிய உழைக்கும் மக்கள் ,பெண்கள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்த வாக்குறுதிகளை உறுதியாய் நிறைவேற்றுவதாக அளித்த திமுக அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அந்த வாக்குறுதிகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாக தெரிவிக்க வலியுறுத்தியும் , தெரிவிக்காவிட்டால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை.

ops eps

*சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

*வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

*மழை, வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்களின் துயர் துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல்.

*மழை வெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

*9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை, குழிதோண்டி புதைக்கும் வகையில் அராஜகத்தை கட்டவிழ்த்துவிடும் ,பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி வெற்றி பெற்றிருக்கும் திமுகவுக்கு கண்டனம்.

*விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக கடுமையாக உழைக்கவும் திமுகவின் முறைகேடுகளை தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தல்

*அதிமுகவை கட்டிக்காத்து ஒற்றுமை பேணி எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம் என 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ops eps
அத்துடன் அதிமுகவின் சிறப்பு தீர்மானங்களாக சட்ட விதிகளின்படி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் விதி 20 மற்றும் விதி 43 திருத்தப்பட்டுள்ளது.  இதன்மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உங்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்று சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது . இதுவரை இருவரும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு  வந்த நிலையில் தற்போது சட்ட திருத்தங்கள் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் விதியை தளர்த்தவதற்கும் ,விதிவிலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் என அதிமுக செயற்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.