திருப்பதியில் இலவச லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலவச தரிசனத்திற்காச் செல்லும் பக்தர்கள் இனிமேல் ஒரே நாளில் இரண்டு முறை இலவச லட்டு பெற இயலாது என திருப்பதி தேவஸ்தான் அறிவித்துள்ளது.
திருமலை அன்னமையா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செயல் அதிகாரி தர்மா, “ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் 5 முதல் 10 நிமிடங்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தால் அறைகளை வேறு சிலர் இடைதரகர் மூலம் சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. இடைத்தரகர் முறையை ஒழிக்க இந்த தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். அறைகளுக்கு பெயர் பதிவு செய்யும் போது, முகம் செய்யும் சாதாரண பக்தர்களுக்கு, துணை விசாரணை அலுவலகங்களில் அறைகளை பெற்று, நேரடியாக சென்று காலி செய்தால் மட்டுமே முன்வைப்பு தொகை வழங்கப்படும்.
ஆதார் அட்டையுடன் ஒரு முறை அறை பெறும் பக்தர்களுக்கு 30 நாட்களுக்குப் பிறகே மீண்டும் அறைகள் கிடைக்கும். மார்ச் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை அறைகள் ஒதுக்கீடு மூலம் அதிகபட்சமாக ரூ. 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது . முன்பதிவு மற்றும் கரண்ட் புக்கிங்கிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. திருமலையின் பல்வேறு பகுதிகளில் தங்கும் அறைகளுக்கான பெயர் பதிவு கவுன்டர்கள் சோதனை அடிப்படையில் விரைவில் சிஆர்ஓ அலுவலகம் அருகே மாற்றப்படும்.
இதேபோல், வைகுண்டம் கியூ வளாகம்-2ல் பக்தர்களுக்கு வழங்கப்படும். இலவச லட்டு முறைகேடு செய்வதும் முக அடையாளம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்கள் இல்லாமல் லட்டு டோக்கன் கிடைக்காது. அதேபோல் ஒரே நாளில் பலமுறை சாமி தரிசனம் செய்துவிட்டு, ஒரே பக்தர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை டோக்கனை பெற இயலாது” எனக் கூறினார்.