டிஐஜி தற்கொலையில் புதிய தகவல் - ஏடிஜிபி அருண் தலைமையில் நடந்த காவல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை

 
tn

காவல்துறையில் இல்லாத நண்பர்களிடம் பேசிய டிஐஜி தற்கொலை சிந்தனை வந்து செல்வதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற வருகிறது. காவல்துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், டிஐஜி தற்கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

tn

இந்நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலைக்கு முதல் நாள் இரவு பாதுகாவலரிடம் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளார் விஜயகுமார். மேற்கு மண்டல ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாக டிஐஜி பேசி வந்துள்ளார்.

tn

தனக்கு உள்ள பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அவர் காவல்துறையில் இல்லாத நண்பர்களிடம் பேசிய தற்கொலை சிந்தனை வந்து செல்வதாக டிஐஜி  கூறியுள்ளார். அண்மை காலமாக மருத்துவர்களை மாற்றியும், மருந்துகளையும் மாற்றி மாற்றி எடுத்ததாகவும், மருந்துகள் சுய குறிப்பு எடுத்து வைத்து மாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மகளின் படிப்புற்கு எல்லாம் ரெடி செய்துவிட்டதாக சக அகிகாரிகளிடம் முன்னரே தெரிவித்ததாகவும்  கோவையில் ஏடிஜிபி அருண் தலைமையில் நடந்த காவல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.