வெளியான புது கருத்துக்கணிப்பு : திமுகவிற்கும் தவெக-விற்கும் பெருகும் ஆதரவு..!

 
1 1

நியூஸ்18 நிறுவனம் தரப்பில் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 35.8 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணி 33.8 சதவிகித வாக்குகளையும், விஜய்யின் தவெக 19.2 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6.5 சதவிகித வாக்குகளையும், கணிக்க முடியாத வாக்குகளாக 4.7 சதவிகிதமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, ஸ்டாலினுக்கு ஆதரவாக 33.3 சதவிகிதம் பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு 29.8 சதவிகிதம் பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் முதல்வராக வேண்டும் என்று 23.2 சதவிகிதம் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 8.5 சதவிகிதம் பேரும், கணிக்க முடியாமல் 5.2 சதவிகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஜனவரியில் CHANAKYA நடத்திய சர்வேயில் EPS - 37%, ஸ்டாலின்  - 33%, விஜய்க்கு -21% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது