தமிழ்நாட்டில் இனி இதற்கு அனுமதியே இல்லை - அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்!

 
 மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார். மக்களிடையே பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும், 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏழு லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்போகிறோம்..”  அமைச்சர் மெய்யநாதன் அதிரடி | nakkheeran

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உள்ளது. 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு வந்தாலும் அண்டை மாநிலங்களிலிருந்து வருவதால் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில்லை என மக்கள் மனதளவில் மாற வேண்டும். அப்போது தான் மாற்றம் நிகழும்.

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் இந்தியா!  அதிர்ச்சி தகவல்!! | India Produces 25,000 Tonnes Plastic Waste Daily, 40%  Uncollected: Centre - NDTV Tamil

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் மூலம் வரப்பெற்ற 5 லட்சம் மனுக்களில் 3.5 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோன்று, கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் கோரிக்கைகளை 3 மாதங்களில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிகழாண்டு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன. மேலும், நகர்ப்புறங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்” என்றார்.