"வாட்ஸ் ஆப்பில் Hi அனுப்பினால் போதும்.." சபரிமலை பக்தர்களுக்காக புதிய ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் உதவிக்காக கேரள அரசு 'The Swami' எனப்படும் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் வாட்ஸ் அப் ChatBot-ஐ அறிமுகம் செய்துள்ளது
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் உதவிக்காக கேரள அரசு 'The Swami' எனப்படும் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் வாட்ஸ் அப் ChatBot-ஐ அறிமுகம் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 6 மொழிகளில் இச்சேவையை பெற முடியும். கோயில் திறப்பு, சன்னிதான தரிசனம், தங்கும் இடங்கள், அவசர உதவி எண்கள், பேருந்து சேவைகள் போன்ற விவரங்களை சேட் செய்து பெற முடியும். 62380 08000 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு Hi என மெசேஜ் அனுப்பி இதை உபயோகிக்கலாம் என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


