"குரூப் 4 தேர்வுக்கு புதிய சிலபஸ்" - டிஎன்பிஎஸ்சி முக்கிய அப்டேட்!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துகிறது. இதில் பணிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2 , குரூப் 4 என்ற பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் மீண்டும் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆனால் சில புதிய மாற்றங்களுடன் நடைபெறவிருக்கிறது. தமிழர்களுக்கு பணி கொடுக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் செய்வதாக அண்மையில் அரசு அறிவித்திருந்தது.

UPSSC recruitment: Answer key for VDO, gram panchayat recruitment exam  released, here's how to check - Hindustan Times

அதன்படி தமிழ் மொழித் தேர்வு தகுதித் தேர்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் விருப்ப மொழிப்பாடப் பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வுகளில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த பகுதியான பொது அறிவுப் பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  

TNPSC Group Exam Date Announced Group 2 Exam In February 2022, Group 4 Exam  March 2022- Balachandran | TNPSC Group 2, 4 Exam Date:பிப்ரவரியில் குரூப்  2, மார்ச்சில் குரூப் 4 தேர்வு...

அதேபோல 40 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பிரிவில் எடுத்தால் அதுவும் மதிப்பிடப்படும். அதாவது மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படும். பொது அறிவுப் பகுதியில் 100 வினாக்களில் 75 பொது அறிவு வினாக்களும் , 25 திறனறி (Aptitude) வினாக்களும் இடம்பெறும். குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து எந்த புதிய அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. 

குரூப் 4 தேர்வுக்கு புதிய பாடத்திட்டமா பழைய பாடத்திட்டமா

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். மேலும் தமிழ்மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி பதிலளிக்கும் (ஒஎம்ஆர்) முறையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்” என்று சொல்லப்பட்டது.