மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம்!!

 
tn

மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 27.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், 29 கோடி ரூபாய் செலவில் அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

stalin

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், 19,472.09 சதுரமீட்டர் பரப்பளவில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆறு தளங்களுடன், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் இருதய சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தின் தரைதளத்தில், நுண்கதிர்வீச்சு துறை மற்றும் இருதய அவசர சிகிச்சை பிரிவு, முதல் தளத்தில் நவீன கேத்லேப் மற்றும் இருதய மருத்துவ சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பரிவு மற்றும் சிறப்பு வார்டு, இரண்டாம் தளத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவு, சிறப்பு வார்டு மற்றும் பொது வார்டு, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்களில் மொத்தம் 23 சிறப்பு அறுவை அரங்கம் கொண்ட கூறுவகை அறுவை அரங்கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்புதிய கட்டடத்தில், மிக நவீன மருத்துவ கருவிகளான எம்.ஆர்.ஐ, பைபிலேனார் கேத்லேப், சிங்கிள் பிளேனார் கேத்லேப், நவீன மின்னணு மானிட்டர்கள், நவீன மயக்க மருந்து நிலையங்கள், நவீன லேப்ராஸ்கோபி கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மிக நவீன கூறுவகை அறுவை அரங்கத்தில் செய்யும் நவீன இருதய அறுவை சிகிச்சை, நவீன மூளை அறுவை சிகிச்சை, நவீன இரத்த குழாய் அறுவை சிகிச்சை ஆகியவை தென்தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இந்த கட்டிடத்திற்குரிய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டடப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தல்

stalin

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தரை மற்றும் மூன்று தளங்களுடன் 8 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், முதல் தளத்தில் பொது அறுவை சிகிச்சை அரங்கம், கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, இரண்டாம் தளத்தில் இரத்த வங்கி, பொது மருத்துவ பிரிவு, ஆண் உள்நோயாளிகள் பிரிவு, மூன்றாம் தளத்தில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.