#BREAKING கோவையில் குழந்தை நரபலி? சிதறிகிடந்த உடல்
கோவை அருகே பிறந்த குழந்தை உடல் சிதறிய நிலையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி-வீரியாம்பாளையம் பகுதியின் சாலையில் பிறந்து நான்கு மணி நேரமே ஆன குழந்தையின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சாலையோரம் கிடந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி டிஎஸ்பி கரிகால பாரி சங்கர், கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் கோவை அருகே உள்ள காளப்பட்டி, பெரும்பள்ளம் பகுதியில் உள்ள இடத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையின் கால்கள் அப்பகுதியில் உள்ள நாய்களால் கடித்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் மிட்கப்பட்டது. குழந்தையின் உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது குழந்தையின் இடுப்பின் கீழ் பகுதி இல்லாமல், இரண்டு கைகளும் நாய் கடிகளால் சிதலமடைந்து இறந்த நிலையில் குழந்தை கிடைத்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தையின் பாலினம் குறித்த தகவல் தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.காளப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பெரும்பள்ளம் பகுதியில் குழந்தையின் உடல் கிடைத்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகாத உறவால் குழந்தை பிறந்ததால் வீசப்பட்டதா? பிறந்த போது குழந்தை இறந்ததால் வீசப்பட்டதா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீசார் குழந்தையின் உடல் பாகங்கள் கிடந்த இடத்தை சுற்றியுள்ள சுற்றி உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் சாலையோரம் சிதலடைந்த குழந்தையின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


