திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற புதுமண தம்பதி!

 
dmk

சென்னையில் நடைபெற்று வரும் திமுக உண்ணாவிரத போராட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் கலந்துகொண்டனர். 

நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரன்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.


இந்த நிலையில், புதுமண் தம்பதி ஒன்று திமுகவின்  உண்ணாவிரத போராத்தில் திருமணம் முடிந்த கையோடு கலந்துகொண்டனர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தி.மு.கழக விவசாய அணி மாநில துணை செயலாளர் அண்ணன் அரியப்பன் அவர்களின் மகன் தம்பி அ.அன்பானந்தம் - வெ.சொர்ணப்பிரியா இணையரின் திருமணத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று காலை நடத்தி வைத்தார்கள். திருமணம் முடிந்த கையோடு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத அறப்போராட்டத்தில் இணையர் இருவரும் மணக்கோலத்திலேயே பங்கேற்றனர்.நம் மாணவர்களின் கல்வி உரிமை காக்க, நீட் எதிர்ப்பு உண்ணாவிரத அறப்போரில் இணைந்த அன்பானந்தம் - சொர்ணப்பிரியா இணையரின் சமூக அக்கறை போற்றுதலுக்குரியது. இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவர்களை வாழ்த்தினோம். இவ்வாறு கூறினார்.