கோவை மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ சோதனை
May 21, 2024, 11:12 IST1716270149211
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக மருத்துவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெரிய சுப்பன்ன கவுண்டர் லேஅவுட் மற்றும் சாய்பாபா காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


