மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!
Feb 3, 2025, 09:04 IST3:34:57 AM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து சதி செயல்களை முறியடிக்கும் பணிகளில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபட்டு வருகிறது. அதன்படி தமிழகத்திலும் அவ்வபோது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாபா பக்ரூதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது வீட்டில் என். ஐ. ஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.