சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை - நெல்லை முபாரக்..

 
சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை - நெல்லை முபாரக்..


சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை நடத்தப்பட்டதாக எஸ்.டி.பி.ஐ கட்சிடயின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு  பாமக முன்னாள் நகரச் செயலாளர் திருப்புவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அவரது கொலையில் மதமாற்றம் தொடர்பான சர்ச்சை இருப்பதால்  எஸ்.டி.பி.ஐ, மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது.  இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை - நெல்லை முபாரக்..

அந்தவகையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ரெய்டுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக், “சிறுபான்மை இயக்கங்களை அடக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை நடக்கிறது. திருபுவனம் ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையை பிரதமர் மோடி விசாரணை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.