''வங்கி கடன் கிடைக்கவில்லையென்றால் என்னிடம் புகாரளிக்கலாம்''- நிர்மலா சீதாராமன்

 
 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கியில் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் கிடைக்கவில்லை என்றால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டம்: மம்தா கூறியது முற்றிலும் தவறு - நிர்மலா சீதாராமன் விளக்கம்.. 


சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வங்கியில் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் கிடைக்கவில்லை என்றால் தன்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். கடன் அளிக்காத வங்கிகளை நான் பார்த்துகொள்கிறேன். புதிய கல்வி கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை இந்தியை திணிப்பதாக இருந்தால் என்னை கேளுங்கள். அன்று மருத்துவ கல்லூரில சீட் வாங்க 50 லட்சம் கேட்டார்கள். ஆனால் இன்று ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க நீட் தேர்வு தான் காரணம்.  பிரதான சாலையில் மிகப்பெரிய கட்டிடம், வெளியில் 100 அடி கொடி.. இது இல்லை மிகப்பெரிய கட்சி.. கட்சியில் மகன், மாமா, மாப்பிள்ளைதான் தலைவரா இருக்கணுமா?  எங்கள் கட்சியில் ஒரு குடும்பத்தில் இருந்து தான் தலைவரா வருவாங்க அப்டினுலாம் இல்லை.. யார் வேண்டுமானாலும் பெரிய இடத்துக்கு வரலாம். வாரிசு அரசியல் செய்யும் கட்சி பாஜக அல்ல. பாஜகவில் உழைப்புக்கும் திறமைக்கும்தான் பதவி கிடைக்கும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பிரதமர் மோடி முயர்சி செய்கிறார். பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்கள் குறையாமல் இருக்க போராடிவருகிறோம். மீனவர்கள் நலனில் எதிர்க்கட்சிகள் செய்யும் பொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள். தமிழ்நாட்டு பெண்களுக்கு 10000 ரூபாயை கொடுத்துவிட்டு வேற கட்சியில் போய் சேர்ந்துருவியா? என மிரட்டுவார்கள். ஆம் என நீங்கள் தைரியமாக சொன்னால்,  ‘ஏய் சொன்னியா டி’ என நாளைக்கே உங்கள் வீட்டுக்கு வந்துருவாங்க.. ஆனால் நம்ம மோடி ஐயா, எவ்வளவு செய்தாலும், ‘நீங்க எங்க கட்சியில் தான் இருக்கணும்’ என சொல்லவே மாட்டார்” என்றார்.