“கூட்டணிக்குள் வரும் சிறு சிறு உட்கட்சி பூசல்களை பெரிது படுத்த வேண்டாம்”- நிர்மலா சீதாராமன்
நமது கூட்டணிக்குள் வரும் சிறு சிறு உட்கட்சி பூசல்களை பெரிது படுத்த வேண்டாம் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமாகா நிறுவனருமான ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம், சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு முப்பானார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களை தமிழ் மாநில காங்கிரசு மூப்பனார் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வரவேற்று புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மூப்பனார் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர். நாடு முழுவதும் அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது. அத்தகைய தமிழ் தலைவரான மூப்பனார் பிரதமர் ஆக சந்தர்ப்பம் இருந்தத்தை தமிழ் தமிழ் என பேசுபவர்கள் பிரதமர் ஆக விடாமல் தடுத்து துரோகம் செய்ததாக குற்றம் சாட்டினார்.மது, போதைப் பழக்கம் அதிகரித்துள்ள தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்தார்.மூப்பனாருக்கு நடந்தது தான் தமிழகத்தின் தமிழர்களுக்கு நடந்த மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.மூப்பனார் எண்ணம் மாதிரி நல்லாட்சி அமைய அனைவரும் பணி செய்ய வேண்டும்.2026 தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. மக்கள் நல்லாட்சியை கேட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்தக் கூட்டணியை நன்றாக நடத்தி செல்ல வேண்டும். கூட்டணி மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். சிறு சிறு உட்கட்சி பூசல்களை பெரிது படுத்த வேண்டாம். முதிர்ச்சி அடைந்த பக்குவம் அடைந்த தலைவர்கள் நம் முன் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை வேண்டும்” எனக் கூறினார்.


