#Budget 2026 மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள்- நிர்மலா சீதாராமன்
சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஆதிச்சநல்லூர் முதல் பழவேற்காடு ஏரி வரையிலான பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
அதிவேக ரயில் (High-Speed Rail): சென்னை - பெங்களூரு மற்றும் ஹைதராபாத் - சென்னை இடையே புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
கனிம வள வழித்தடம் (Rare Earth Corridor): தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரிய வகை கனிமங்களை அகழ்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் தனி வழித்தடம் அமைக்கப்படும்.
உள்நாட்டு நீர்வழிப்பாதை: ஒடிசாவின் தால்சர் முதல் தமிழ்நாட்டின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை (Inland Waterway) திட்டம்.
ஜவுளித் துறை: ஜவுளித் துறையை மேம்படுத்த பிரத்யேக ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு.
பெண்கள் மற்றும் கல்வி: மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் மற்றும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க 'She Mart' திட்டங்கள்.
சுற்றுலா: ஆதிச்சநல்லூர் முதல் பழவேற்காடு ஏரி வரையிலான பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு.


