விஜயகாந்த்துக்கு பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல் என்று அஞ்சலி செலுத்துவோம்- நிர்மலா சீ்தாராமன்

 
nirmala

விஜயகாந்த்தை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Vijayakanth, actor-politician and DMDK founder, passes away in Chennai; to  be laid to rest with State Honours | Mint

தேமுதிக தலைவரும், முன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். நடிப்பிலும் முத்திரை பதித்து, நடிகர் சங்கத்திலும் ஆளுமையுடன் செயலாற்றிய விஜயகாந்த், அரசியலிலும் கால்பதித்து, அரசியல் பயணத்திலும் தனக்கென தனிபாணியை உருவாக்கி மக்கள் மனங்களை வென்றார். மிகக் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். எளிய மக்களுக்கு அன்பின் உருவமாக, கருணையின் வடிவமாக இருந்த விஜயகாந்த்  மரணம் தேமுதிகவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.


இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “Captain Vijaykanth is no more. Condolences. Was known as ‘man with a golden heart.’ மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.  தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.