நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை: நீதிபதி கருத்து

 
யோகி பாபு படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா ! 

நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா எங்கு இருக்கிறார்னு சத்தியமா தெரியல! கண்டுபிடிக்கவும் முடியல- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தமிழக அரசு தக்கார் நியமித்தது. இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நித்யானந்தா காணொலி காட்சி மூலம் ஆஜராகலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு மனுதாரர் தரப்பில் தயக்கம் தெரிவித்ததை அடுத்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காட்சன் , நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல எனக் கூறினார்.

இவ்வழக்கில் நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் நித்யானந்தாவின் கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி பெரியவர் கூறியது போல துறவி எப்போதும் துறவியாகவே இருக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.