என்.எல்.சி. தொழிலாளர்கள் 15வது நாளாக வேலைநிறுத்தம்..

 
என்.எல்.சி. தொழிலாளர்கள் 15வது நாளாக வேலைநிறுத்தம்..

என்.எல்.சியில் தொழிலாளர்கள் 15வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள் பணி நிரந்தரம் செய்தல், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கிடுதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா தொழிற்சங்க தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய போராட்டமானது இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

nlc

முன்னதாக போராட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், என்.எல்சி நிறுவனம் மற்றும் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு  பாதுகாப்பு வழங்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, போராட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிக்கையை சமர்பிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் 11ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டார். வழக்கு ஒருபுறம் இருக்க, தொழிலாளர்களின் போராட்டம் இன்று 15வது நாளை எட்டியிருக்கிறது.