குறையும் கொரோனா : சர்வதேச பயணிகளுக்கான தளர்வுகள் அமலுக்கு வந்தது!!

 
ttn

இந்தியாவில் சர்வதேச  பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட  தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த மாதம் லட்சத்தை தாண்டியது. இதனால் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுமாறு அறிவித்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில்,  தற்போது இந்தியாவில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி  தினசரி பாதிப்பானது 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

domestic flights

இதனால் அந்தந்த மாநிலங்களில்தொற்று எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று  கட்டுக்குள் வந்ததையடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கான தளர்வுகளில் மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

flight

இந்நிலையில் சர்வதேச பயணிகளுக்காக  மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.  வெளிநாட்டு பயணிகள் இனி ஏழு நாட்கள் தனிமைப்படுத்த படவேண்டாம் , ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட தேவையில்லை,  பயணிகள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழை பதிவேற்றம் செய்தால் போதுமானது, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தங்களை  சுயமாக 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.