தமிழக ஆட்சியில் கத்திக்குத்துகளுக்கு நடவடிக்கையே இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்!

 
1

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

அரசு மருத்துவமனைக்குள் கத்திக்குத்து..

அரசு பள்ளிக்குள் கத்திக்குத்து..

நீதிமன்ற வளாகத்திற்குள் கத்திக்குத்து..

இன்று தமிழக ஆட்சியில்

கருத்து குத்துகளுக்கு

உடனே நடவடிக்கை

கத்திக்குத்துகளுக்கு இல்லை நடவடிக்கை

இதுவே இன்றைய தமிழக அரசின்

வாடிக்கை..

இதை திராவிட மாடல் என்று சொல்வது வேடிக்கை..

சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பாருங்கள் என்பது..

மக்களின் கோரிக்கை.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.