பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை; அதிமுக தலைமையில் புதிய கூட்டணி!!

 
tn

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

eps and modi


இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , "உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணி முறிந்துள்ளது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை, பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல். நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.

kp munusamy

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலையை மாற்ற கூறுவது எங்கள் எண்ணம் இல்லை. நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். தேர்தல் வந்தால் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து விடும் என அமைச்சர் உதயநிதி கூறுவது நடக்காது. அதிமுக மீது அச்சத்தில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்" என்றார்.