பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 
tn

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ep

இந்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில்  பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “"எந்த காலத்திலும் தமிழ்நாடு கோரும் நிதியை ஒன்றிய அரசு வழங்குவதில்லை; காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றன. | தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை முன்னரே தெளிவுபடுத்திவிட்டோம்” என்றார்.

EPS

தொடர்ந்து பேசிய அவர் , ஊழல் செய்ததில்தான் சாதனை செய்தனர், வேறு என்ன சாதனை செய்தனர்?; சரியான முறையில் கொரோனா பரவலை தடுக்க முடியாமல் திணறியது திமுக; 520 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டதா?; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நடத்தவும் தெரியவில்லை; ஆட்சி நடத்தவும் தெரியவில்லை மீண்டும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்; அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துவிட்டது என்று கூறினார்.