மகளிர் உரிமைத் தொகை -மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை?!

 
tn

மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளனர்  என்று தகவல் வெளியாகியுள்ளது.

tn

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தின்‌ கீழ இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டன. முதற்கட்ட முகாம்கள்‌ ஜுலை 24 தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம்‌ கட்ட முகாம்கள்‌ ஆகஸ்ட்‌ 05 தேதி முதல்‌ 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப்‌ பதிவு செய்யப்பட்டன. விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 18 ஆம் தேதி முதல்  நேற்று வரை மூன்று நாட்கள்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டது.

கலைஞர் உரிமைத் தொகை : 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு.. முக்கிய பணி 6ம் தேதி தொடக்கம்..

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்தது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் முகாம்  அமைக்க வாய்ப்பு இல்லை . 2 கட்டங்களாக நடந்தமுகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.