"பாஜகவுடன் கூட்டணி முறிவு " - அதிமுக நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை!!

 
EPS

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ep

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தொண்டர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஏக மனதாக பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தீர்மானம் நிறைவேற்றினோம். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை என வி.பி. துரைசாமி தெரிவித்தது அவரது சொந்த கருத்து.  அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் பொறுத்திருந்து பாருங்கள்.  நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும்.

eps and modi

 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளின் கோரிக்கை தொடர்பாகவே அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சரை சந்தித்தனர். இந்தியா கூட்டத்தில் காவிரி பிரச்சனையை முன் வைத்திருந்தால் சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கும்.  தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக எந்த அழுத்தத்தையும் தரவில்லை.  பாஜக மாநில தலைவரை மாற்ற வேண்டுமென நாங்கள் கோரிக்கையும் வைக்கவில்லை. பாஜக உடனான கூட்டணி முடிவு என்பது இரண்டு கோடி தொண்டர்களின் முடிவு என்றார்.