மாலைகளுக்கு இடம் தரக்கூடாது - ராமதாஸ் எச்சரிக்கை!!

 
PMK

மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார். 

PMK

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கி வரும் நிலையில் அந்தந்த கட்சிக்கு ஏற்றவாறு சில கொள்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுவாக அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் போது பூங்கொத்து, சால்வைகள், மாலைகள் ஆகியவற்றை அணிவித்து,  அவர்களுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.  இதை தற்போதுள்ள சூழலில் பல அரசியல் கட்சிகள் தவிர்த்து வருகின்றன. குறிப்பாக மாலைகள் , சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மாலைகளுக்கு  இடம் தரக்கூடாது! பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளில்  மாலைகளுக்கு இடம் கிடையாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது.  அந்தக் கலாச்சாரம் இப்போது சில இடங்களில் மீண்டும் துளிர்விடுவதாக அறிகிறேன். அது கூடவே கூடாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என்று எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.