வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

 
rain

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
 

heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.  வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒரு மாவட்டத்திற்கு ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் என தமிழ்நாடு முழுவதும் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

stalin

இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

*மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறை உருவாக்க நடவடிக்கை

*பொதுமக்கள் அணுகுவதற்கான அவசர தொலைபேசி எண் 1800 425 5880 அறிவிப்பு

*கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியில் அழைக்க 19 62 என்ற இலவச எண் ஒதுக்கீடு

*மாவட்ட அளவில் 1794 அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு

*மழையால் பாதிக்கப்படக்கூடிய கால்நடைகளை பாதுகாக்க 1749 கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.