பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்- கல்வித்துறை அதிரடி
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ' சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே இன்று ணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு வராத அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். விளக்கம் கேட்கப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


